Paristamil Navigation Paristamil advert login

தென் கொரியாவின் ஜனாதிபதி வளாகத்தில்  விழுந்த குப்பை பலூன்

தென் கொரியாவின் ஜனாதிபதி வளாகத்தில்  விழுந்த குப்பை பலூன்

25 ஆடி 2024 வியாழன் 09:01 | பார்வைகள் : 5472


வடகொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியாவின் ஜனாதிபதி வளாகத்தில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடகொரியாவின் பலூன்கள் எல்லையைத் தாண்டி இன்று காலை தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்த நிலையில் தென்கொரிய அதிபர் அலுவலகத்தின் மீது குப்பை பலூன்கள் விழுந்தன.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தென் கொரிய தீபகற்பம் சமீபகாலமாக தொடர்ந்து பதற்றத்தில் உள்ளது.

இதன் காரணமாக தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நிலவி வருகிறது.


இதனிடையே சில நாட்களாக ராட்சத பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென்கொரியாவிற்குள் வடகொரியா அனுப்பி வருகிறது.

இதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்