Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் நெட்டன்யாகுவிற்கு எதிர்ப்பு - கொடும்பாவி எரிப்பு

அமெரிக்காவில் நெட்டன்யாகுவிற்கு எதிர்ப்பு - கொடும்பாவி எரிப்பு

25 ஆடி 2024 வியாழன் 09:09 | பார்வைகள் : 6264


அமெரிக்க காங்கிரசில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உரையாற்றியுள்ள  வோசிங்டன் டிசியில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியையும் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் உருவப்பொம்மையையும் எரித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹமாஸ் கமிங் என்ற வாசகத்தை எழுதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலம்பசின் சிலைமீது ஏறியுள்ளனர்.

வோசிங்டனின் பிரதான புகையிரத நிலையத்தின் முன்னால் பாலஸ்தீன கொடிகள் ஏற்றப்பட்டதாகவும்,

நெட்டன்யாகுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்