நீர்நிலைகளில் குறையும் ஆஜ்சிஜன்! ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை

25 ஆடி 2024 வியாழன் 09:36 | பார்வைகள் : 8852
உலகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடல், நதி என பூமியின் 70 சதவீத பரப்பு நீரினால் ஆனதாகும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையும் நீரே ஆகும்.
இந்த சூழலில் நீர் நிலைகளில் ஆக்சிஜன் வேகமாக குறைந்து வருவதால் நீரை சார்ந்துள்ள உயிர்க்கோலம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
ஏனெனில் கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
எனவே ஆக்சிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது உணவுச் சங்கிலியில் பிளவை ஏற்படுத்தும்.
மேலும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்சிஜன் கடலிலிருந்துதான் உற்பத்தியாகிறது.
ஆகையால் கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025