உருளைக்கிழங்கு பால் கறி
25 ஆடி 2024 வியாழன் 14:39 | பார்வைகள் : 635
உருளைக்கிழங்கு கொண்டு செய்யும் உணவு பொருட்களை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். உருளைக்கிழங்கை பல்வேறு விதங்களில் செய்து சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கை வைத்து வறுவல், பொரியல், கிரேவி என பல வகைகளில் நாம் சாப்பிட்டிருப்போம். உருளைக்கிழங்கில் பால் கறி வைத்து சாப்பிட்டுருக்கீங்களா.? இதுவரை சாப்பிட்டது இல்லை எனில் இப்போது ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது)
சிறிய வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
விளம்பரம்
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் - 5 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை
செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலையை போட வேண்டும். பின்னர் வெங்காயம் சேர்த்த சிறிது நேரம் கழித்து தக்காளியை சேர்க்க வேண்டும்.
3 நிமிடத்திற்குப் பிறகு உப்பு , உருளைக்கிழங்கை சேர்த்த பின்னர் சீரகம் ,சோம்பு ,தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்த மசாலாவை ஊற்றி வேக வைக்க வேண்டும்.
மீதம் உள்ள எண்ணெயை சேர்த்த பின்னர் 2 நிமிடம் வைத்து இறக்கினால் உருளைக்கிழங்கு பால் கறி ரெடி.