தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி?
25 ஆடி 2024 வியாழன் 15:16 | பார்வைகள் : 1765
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சிறந்த உணவு பழக்கம் எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எடை இழப்பு பயணத்தின் போது பெரும்பாலானோர், சிறிய விஷயங்களை கூட புறக்கணித்து விடுகிறார்கள். அதனால் அவர்கள் நல்ல பலனையும் இழக்கிறார்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவை தவிர தண்ணீரிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆம், சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் சரியான அளவு தண்ணீர் குடித்து வந்தால் உடலில் சேரும் கொழுப்பை சுலபமாக கரைத்து விடலாம் தெரியுமா? இதைக் கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. தண்ணீரால் உடல் எடையை குறைப்பது முற்றிலும் சாத்தியமானது. இது பல ஆய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
தண்ணீர் குடிப்பது கலோரிகளை எடுக்கவும், பசியை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. எடை இழப்புக்கு தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுவதற்கு காரணம் இதுவே. ஆனால், சர்க்கரை கலந்த பானங்களுக்கு பதிலாக, வெறும் தண்ணீரை குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் அதிக எடையில் இருந்து சுலபமாக விடுபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் உடலில் உள்ள கலோரி மற்றும் சர்க்கரையின் அளவை பெரிதும் குடிக்கலாம்.
உடல் எடையை குறைக்க உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் எப்போதும் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி,தண்ணீர் குடித்தால் ஏற்கனவே நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும். இந்த வழியில் நீங்கள் சாப்பிடும் போது அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். குறைந்த அளவு உணவை உண்ணும்போது எடை அதிகரிக்கும் அபாயத்தையும் குறைக்கலாம். நீங்கள் தேவையில்லாமல் உணவு சாப்பிடுவதையும் கூட தவிர்க்கலாம்.
தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், தண்ணீர் குடித்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் உங்கள் உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் மற்றும் உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் சரியாக பின்பற்றினால் மட்டுமே, எடையை குறைப்பதில் வெற்றி காண்பீர்கள்.
இது தவிர, நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதும் உடல் எடையை குறைக்கும் தெரியுமா? உதாரணமாக, நீங்கள் ஆரோக்கியமான நபராக இருந்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை, ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் வேலை செய்தால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு நபரின் உடல் செயல்பாடு மற்றும் எடையை பொறுத்து உடல் எடையை குறைக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.