சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணியின் ‘புறநானூறு’?
25 ஆடி 2024 வியாழன் 15:19 | பார்வைகள் : 1667
மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதைத்தொடர்ந்து இவர் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று பல்வேறு விருதுகளையும் அள்ளியது. எனவே மீண்டும் சூரியாவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா. அதன்படி சூர்யாவின் 43வது படமாக புறநானூறு திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தின் கதையானது 1950ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாக கொண்ட கதை ஆகும். எனவே ஒரு சில அரசியல் காரணங்களால் நடிகர் சூர்யா இந்த படத்தில் விலகிவிட்டார். சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன், புறநானூறு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறார். மேலும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தை ஆரம்பத்தில் சூர்யா தான் தனது 2D நிறுவனத்தின் மூலம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது படமானது கைமாற இந்த படத்தை சிவகார்த்திகேயனே தனது எஸ்கே ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்க உள்ளாராம். மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மற்றொரு தயாரிப்பு நிறுவனமும் படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.