முதன்முறையாக ஒரிஜினல் சிங்கத்தை நடிக்க வைக்கும் பிரபல இயக்குனர்!
26 ஆடி 2024 வெள்ளி 06:27 | பார்வைகள் : 10230
இயக்குனர் பிரபு சாலமன், கடந்த 1999 ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் இயக்கிய மைனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பிரபலம் இல்லாத நடிகர்களை நடிக்க வைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
அதன் பிறகு கும்கி, கயல், செம்பி போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்டார். இந்நிலையில் அடுத்ததாக பிரபு சாலமன் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு மேம்போ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் இருக்கும் தனித்துவமான விஷயம் என்னவென்றால், ஆசியாவிலேயே முதன்முறையாக எந்தவித கிராபிக்ஸும் இல்லாமல் ஒரிஜினல் சிங்கத்தை நடிக்க வைக்கிறார் பிரபு சாலமன். இந்த படத்தை ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் டி இமான் இசையமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan