33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்

26 ஆடி 2024 வெள்ளி 08:38 | பார்வைகள் : 3099
33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் 26-07-2024 பிரான்ஸில் ஆரம்பமாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரின் மையப்பகுதியில் ஓடும் செயின் ஆற்றில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஆரம்ப விழா மைதானத்திற்குள் நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
100 படகுகளில் சுமார் 10,000ற்கும் மேற்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை சார்பில் நதீஷா தில்ஹானி, விரேன் நெத்தசிங்க, கங்கா செனவிரட்ன, கைய்ல் அபேசிங்க, தருஷி கருணாரட்ன மற்றும் அருண தர்ஷன ஆகிய 6 தடகள வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.