■ SNCF : 800,000 பயணிகள் பாதிப்பு.. பல்வேறு குற்றச்செயல்களால் தடைப்பட்டுள்ள போக்குவரத்து சேவைகள்!
26 ஆடி 2024 வெள்ளி 13:30 | பார்வைகள் : 4889
இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பல்வேறு தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில் இந்த சேவைத்தடை பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் கப்ரியல் அத்தால் குற்றவாளிகளை அடையாளம் காண்போம் என உறுதியளித்துள்ளார்.
இன்று காலை முதலே வடக்கு மற்றும் கிழக்கு அட்லாண்டிக் சேவைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ள. தண்டவாளம் அருகே தீவைக்கப்பட்டுள்ளதும், சமிக்ஞை கம்பிகள் அறுக்கப்பட்டுள்ளதும் என என பல்வேறு குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 800,000 பயணிகளது பயணம் தடைப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தொடருந்து நிலையங்களில் தரித்து நிற்கின்றனர்.
தொடருந்து நிலையங்களுக்கு பயணிக்க வேண்டாம் என முன்பதிவு செய்த பயணிகளுக்கு தனிப்பட்ட முறையில் குறுந்தகவல்கள் (SMS) அனுப்பட்டுள்ளதாக மாகாண முதல்வர் Pécresse தெரிவித்துள்ளார்.
இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என பிரதமர் கப்ரியல் அத்தால் தெரிவித்தார். ‘பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்!’ எனவும் அத்தால் குறிப்பிட்டுள்ளார்.
SNCF இன் நிர்வாக இயக்குனர் Jean-Pierre Farandou தெரிவிக்கையில், ‘திருத்தப்பணிகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. தற்போது வரை மீள சேவைகள் ஆரம்பிக்கும் நேரத்தைச் சொல்லமுடியாதுள்ளது’ என குறிப்பிட்டார்.