வியாழனை விட 6 மடங்கு பாரியது., Super Jupiter-ஐ கண்டுபிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
26 ஆடி 2024 வெள்ளி 11:55 | பார்வைகள் : 977
வியாழன் கிரகத்தை விட ஆறு மடங்கு பாரிய Super Jupiter-ஐ சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
நாசாவின் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கி இந்த மாபெரும் கிரகத்தின் சில படங்களை எடுத்தது. இது குறித்த விவரங்கள் Nature இதழில் வெளியாகியுள்ளது.
இந்த கிரகம் தனது நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு முறை சுற்றி வர சுமார் 100 முதல் 250 ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பிரமாண்ட கிரகம் பூமியில் இருந்து 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல், இந்த கிரகத்திற்கும் அதன் நட்சத்திரத்திற்கும் இடையிலான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட சுமார் 15 மடங்கு அதிகம் என்று நம்பப்படுகிறது.
முழுக்க முழுக்க வாயுவால் ஆன இந்த கிரகத்தின் வளிமண்டலம் பூமியில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என இந்த ஆராய்ச்சி குழுவை வழிநடத்திய எலிசபெத் மேத்யூஸ் கூறியுள்ளார்.