Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மோனாலீஸா உலகப் புகழ்பெற்றது ஏன்..?

மோனாலீஸா உலகப் புகழ்பெற்றது ஏன்..?

1 புரட்டாசி 2023 வெள்ளி 12:43 | பார்வைகள் : 12803


மோனாலீஸா ஓவியம் பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டீர்கள். உலகப்புகழ் பெற்ற அரிய படைப்பு அது. 500 ஆண்டுகள் பழைமைக்க அந்த ஓவியத்தை இன்றுவரை பத்திரமாகப் பேணிப் பாதுகாத்துவருகிறது பிரெஞ்சு அரசு.

இந்த உலகில் எத்தனையோ பிரமாண்டமான ஓவியங்கள் இருக்கும்போது, வெறும் 77 செண்டிமீட்டர் உயரமும் 53 செ.மீ அகலமும் கொண்ட இந்தச் சிறிய ஓவியம் எப்படி உலகப் புகழ்பெற்றது?

என்பதை அறிவதற்கு முன்னர், யார் இந்த மோனாலீஸா..?

1479 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி, இத்தாலியில் பிறந்த ஒரு பெண்தான் மோனாலீஸா. முழுப்பெயர் Lisa Del Giocondo.

அந்நாளில் இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் செல்வாக்கோடு இருந்த Gherardini குடும்பத்தில் இவர் பிறந்ததால், சமயத்தில் Lisa Gherardini எனவும் அழைக்கப்படலானார்.

இந்தப் பெண்ணின் கணவரின் பெயர் Francesco di Bartolomeo di Zanobi del Giocondo. இருவருக்கும் திருமணமாகி, அழகான ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார் மோனாலீஸா.

ஒருநாள் தனது மனைவிக்கு வித்தியாசமான ஒரு பரிசு கொடுக்க வேண்டும் எனக் கருதிய லீஸாவின் கணவர், அந்நாளில் பிரபலமாக இருந்த ஓவியர் லியோனார்டோ டா வின்ஸியை அழைத்து, தனது மனைவியை ஓவியமாக வரைந்து தரும்படி கேட்டார். அதற்கு குறித்த ஒரு தொகை பணத்தையும் வழங்கினார்.

டாவின்ஸி வரைந்தார். ஓவியதைப் பார்த்த லீஸாவின் கணவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. துள்ளிக்குதித்தார். அன்பு மனைவியை அழைத்து பரிசைக் கொடுத்தார். ஓவியத்தின் அழகிலும் கணவரின் அன்பிலும் லீஸா திக்குமுக்காடிப்போனார்.

பின்னாளில் அந்த ஓவியம் உலகப் புகழ்பெறும் என்றோ, அதன் பெறுமதி பல மில்லியன்கள் என்றோ அப்போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

மோனாலீஸாவின் ஓவியத்தில் அவரின் முகத்தில் ஒரு புன்னகை இருக்கும். அந்தப் புன்னகையின் அர்த்தம்
யாருக்குமே புரியவில்லை. உலகின் பெரிய பெரிய உளவியல் நிபுணர்கள், முகத்தைப் பார்த்து கணிப்பிடும் வல்லுனர்கள் என எல்லோருமே முயன்று பார்த்தார்கள்.

ஆனால் லீஸாவின் அந்தப் புன்னகைக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவே இல்லை. அதனால்தான் அது உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.

அதுசரி இத்தாலியில் இருந்த இந்த ஓவியம் பிரான்ஸுக்கு வந்தது எப்படி? இன்னொரு நாள் பார்க்கலாம். 

வர்த்தக‌ விளம்பரங்கள்