Paristamil Navigation Paristamil advert login

கார்டூன் வழியாக பிரெஞ்சு வரலாறு.. பத்து பிரெஞ்சுப் பெண்களின் சிலை... இலங்கை படகு.. இரண்டாவது மணிநேர நிகழ்வின் தொகுப்பு!

கார்டூன் வழியாக பிரெஞ்சு வரலாறு.. பத்து பிரெஞ்சுப் பெண்களின் சிலை... இலங்கை படகு.. இரண்டாவது மணிநேர நிகழ்வின் தொகுப்பு!

26 ஆடி 2024 வெள்ளி 19:50 | பார்வைகள் : 4312


இரண்டாவது மணிநேரத்தில், தொடர்ந்தும் பல நாட்டு வீரர்கள் படகுகளில் சென் நதியில் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.



மழை ஒருபக்கம் துளி துளியாக விழுந்துகொண்டிருக்க, நிகழ்வுகள் இடைவிடாது இடம்பெற்றது.

பிரான்சின் வரலாற்றை பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தினார்கள். அதில் ஒருவடிவமாக Minions எனும் உலகப்புகழ்பெற்ற கார்டூன் கதாப்பாத்திரங்களுடன் 1900 இல் ஏற்பட்ட வெள்ளத்தையும், சினிமா உருவான வரலாற்றினையும், பிரெஞ்சு கலைகள் குறித்தும், நாவல்கள், உலகப்புகழ்பெற்ற குட்டி இளவசரன் கதை (Le Petit Prince) , மூன்று குதிரை வீரர்கள் ( Les Trois Mousquetaires) கதையும் காட்சிப்படுத்தப்பட்டது.

Grande palais கட்டிடத்தின் கூரையில் இருந்து பிரெஞ்சு தேசிய கீதம் பாடப்பட்டது. பிரான்சுக்கே உரித்தான Mezzo-soprano எனும் குரல்வளத்தில் இந்த கீதத்தை பாடகி Axelle Saint-Cirel பாடியிருந்தார். மிகவும் மனதை உருக்கும் விதமாக அது அமைந்திருந்தது. அதன் போது பிரெஞ்சு வரலாற்றில் இடம்பிடித்த பத்து பெண்களது சிலைகள் சென் நதிக்கரையில் திறந்து வைக்கப்பட்டன. சிலைகள் ஒவ்வொன்றாக மேலெழுந்து காட்சிப்படுத்தப்பட்டது.



Olympe de Gouges
Alice Milliat
Gisèle Halimi
Simone de Beauvoir
Paulette Nardal
Jeanne Barret
Louise Michel
Christine de Pizan
Alice Guy
Simone Veil

ஆகிய பத்து பெண்களின் சிலைகளே திறந்துவைக்கப்பட்டன.

படகுகளில் வீரர்களின் வருகை இடைவிடாது தொடர்ந்தது.

சென் நதியில் மிதந்து வந்த மேடை ஒன்றில் மிதிவண்டிகளை வைத்துக்கொண்டு சிலர் சாகசங்களில் ஈடுபட்டனர்.

அதேவேளை, குறித்த மர்ம நபர் ஒலிம்பிக் தீபத்தோடு ஓடிச்செல்வது இடைவிடாது தொடர்ந்தது. இம்முறை லூவர் அருங்காட்சியகத்துக்குள் ஓடிச்சென்றார்.

பரிஸ் என்றாக Fashion காட்சிகள் தானே ஞாபகம் வரும்.. சென் நதியின் மேடை அமைக்கப்பட்டு அங்கு ஒய்யாரமாக பல மொடல்கள் Fashion show இல் அணிவகுத்தனர். சில வித்தியாசமான ஆடைகளுடன் பெண்கள் அணிவகுக்க, கண்கவர் காட்சியாக அது அமைந்தது.

இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், சிங்கப்பூர், சீனா, மலேசியா, சூடான், நேபாளம் போன்ற ஆசிய நாடுகளின் படகுகள் அணிவகுத்தன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்