Paristamil Navigation Paristamil advert login

இறுதியாக வந்த பிரெஞ்சுக் கப்பல்.. அந்த மர்ம நபர் யார்..? மூன்றாவது மணிநேர நிகழ்வுகளின் தொகுப்பு..!!

இறுதியாக வந்த பிரெஞ்சுக் கப்பல்.. அந்த மர்ம நபர் யார்..? மூன்றாவது மணிநேர நிகழ்வுகளின் தொகுப்பு..!!

26 ஆடி 2024 வெள்ளி 20:44 | பார்வைகள் : 6093


மூன்றாவது மணிநேரத்தின் ஆரம்பத்தில், படகுகளின் அணிவகுப்பில் இறுதியாக வந்தது பிரெஞ்சு வீரர்களை தாங்கிய படகு.

மிக நீண்ட படகில் பிரெஞ்சு வீரர்கள் பிரெஞ்சுக்கொடியுடன் அணிவகுத்தனர்.



பின்னர் ஐரோப்பிய கொடி மிளிர, மிதகுபடகு ஒன்று சென் நதிக்குள் நுழைந்தது. ஐரோப்பிய கொடியில் இருக்கும் நட்சத்திரங்கள் எழுந்து பறக்க ஆரம்பித்தன.

மிகப்பெரிய நெருப்பு வளையம் ஒன்றுடன் வருகை தந்த சிறிய படகு ஒன்றில், Juliette Armanet மற்றும் Sofiane Pamart ஆகிய இருவரும் இருந்தனர். ஒருவர் பியானோ வாசிக்க, ஒருவர் பாடல் பாடினார். ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதனை பார்வையிட்டனர்.

பல நட்சத்திரங்களில் நடன நிகழ்வுகளுடன், பிரெஞ்சு நடிகரும், பாடலாசிரியருமான Philippe Katerine, கிரேக்க கடவுள் (Dionysus) போல் வேடமணிந்து வந்து ஓரிரு வரிகளை பாடி அசத்தினார்.

இதுவரை ஐந்து ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. இது ஆறாவது தடவையாகும். அனைத்து ஒலிம்பிக் போட்டிகளையும் நினைவுகூருவது போலவும், அமைதியைக் குறிப்பது போலவும் ஒலிம்பிக் கொடி ஒன்றை தோளில் அணிந்த குறித்த மர்ம நபர் செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘இரும்புக்’ குதிரையில் சென் நதியில் வலம் வந்தார். பலரது கண்கண்களை மிரளச் செய்தது அந்த காட்சி.

Atelier Blam என்பவர் அந்த குதிரையை வடிவமைத்திருந்தார்.

சென் நதிக்கரைகளில் பல இலட்சம் மக்கள் கூடியிருக்க, அனைத்து நிகழ்வுகளையும் சென் நதியிலேயே இடம்பெறுவதும் போல் திட்டமிடப்பட்டிருந்தமை பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

பின்னர் நிகழ்வு அங்கிருந்து ஈஃபிள் கோபுரத்துக்கு இடம்பெயர்ந்தது.

ஈஃபிள் கோபுரத்தின் கீழே ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 206 நாடுகளைச் சேர்ந்த தேசியக்கொடிகளும் பிடிக்கப்பட்டிருக்க, அந்த மர்ம வீரர் இப்போது உண்மையான குதிரையில் அங்கு வருகை தந்தார்.

அந்தமர்ம நபர் குதிரையில் இருந்து இறங்கி, மடித்து வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் கொடியினை சுமந்துகொண்டு மேடை ஒன்றில் ஏறினார்.

ஒலிம்பிக் கொடி, அதன் கம்பத்தில் இணைக்கப்பட்டு, ஒலிம்பிக் கீதம் இசைக்கப்பட கொடி ஏற்றப்பட்டது.

ஈஃபிள் கோபுரத்தின் முன்றலில், ஈஃபிள் கோபுரத்தின் வடிவிலேயே மக்கள் கூடியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இடைவிடாத மழைத்தூறலிலும் பலர் எழுந்து நின்று அசையாது ஒலிம்பிக் கீதத்துக்கு மரியாதை செலுத்தினர்.

மூன்றாவது பாதியிலும் அந்த மர்ம நபர் யார் என்பதற்குரிய விடை கிடைக்கவில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்