Paristamil Navigation Paristamil advert login

அல்ஜீரிய வீரர்கள் சென் நதியில் பூக்கள் தூவியது ஏன்..?!!

அல்ஜீரிய வீரர்கள் சென் நதியில் பூக்கள் தூவியது ஏன்..?!!

27 ஆடி 2024 சனி 05:05 | பார்வைகள் : 4931


நேற்று இடம்பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அவர்களது தூதுவர்களும் படகுகளில் சென் நதியில் வருகை தந்தனர். அவர்கள் அல்ஜீரிய நாட்டு வீரர்களைத் தாங்கிய படகு வருகை தந்த போது, ரோஜா பூ இதழ்களை சென் நதியில் தூவிக்கொண்டு வருகை தந்தனர்.

இந்த செயற்பாடு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

63 வருடங்களுக்கு முன்னர், 1961 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி அல்ஜீரியர்கள் சிலர் பிரெஞ்சு காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது சடலங்கள் சென் நதியில் வீசப்பட்டிருந்தன. அல்ஜீரியாவின் சுதந்திரத்துக்காக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் மீது பிரெஞ்சு காவல்துறை துப்பாக்கிச்சூட்டு மேற்கொண்டனர். இதில் 30 தொடக்கம் 40 பேர் வரையானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.



அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த மலர்களை தூவி அல்ஜீரிய வீரர்கள் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்