Paristamil Navigation Paristamil advert login

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய பாரீஸ் ஒலிம்பிக் ஆரம்ப விழா

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய பாரீஸ் ஒலிம்பிக் ஆரம்ப விழா

27 ஆடி 2024 சனி 08:26 | பார்வைகள் : 543


பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அறிவிக்க, பிரபல இசைக்கலைஞர்கள் Celine Dion மற்றும் Lady Gaga ஆகியோர் பார்வையாளர்களை திக்குமுக்காட செய்தனர்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுகள் கண்கவரும் நிகழ்ச்சிகளுடன் இனிதே துவக்கப்பட்டுள்ளது. பொதுவாக விளையாட்டு அரங்கம் ஒன்றில் துவக்க விழா நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், Seine நதியின் மீது அமைக்கப்பட்ட மேடையில் துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்தி பிரான்ஸ் நிர்வாகம் வரலாறு படைத்துள்ளது.

ஆரம்ப விழாவின் ஒருபகுதியாக பிரபல இசைக்கலைஞர்கள் Celine Dion மற்றும் Lady Gaga ஆகியோர் பாரவையாளர்களை தங்கள் பாடல்களால் பரவசப்படுத்தினர். 19 நாட்கள் நீளும் இந்த தொடரில் 329 தங்கப் பதக்கங்களுக்காக 32 விளையாட்டுகளில் வீரர் மற்றும் வீராங்கனைகள் களம் காண உள்ளனர்.

கொட்டும் மழைக்கு நடுவே, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் போட்டிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க, ஈபிள் கோபுரம் அலங்கார விளக்குகளால் ஒளிர்ந்தது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுகள் முன்னெடுக்கப்படுகிறது. கடைசியாக 1924ல் ஒலிம்பிக் விளையாட்டுகள் பாரீஸ் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள், கலைஞர்கள் என சுமார் 300,000 பேர்கள் Seine நதிக்கரையில் திரண்டிருந்தனர்.

பாரிஸ் நகரின் சில பகுதிகளில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், தெருக்களில் 45,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். எப்போதும் இல்லாதவகையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பாரீஸ் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்ளூர் மக்கள் சிலர் தங்கள் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்