Paristamil Navigation Paristamil advert login

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட நாடுகள்... 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட நாடுகள்... 

27 ஆடி 2024 சனி 08:31 | பார்வைகள் : 655


போர், ஊக்க மருந்து, அரசியல் நிலைப்பாடுகள் அல்லது விதிகளை மீறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக குறிப்பிட்ட சில நாடுகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ தகவலின் அடிப்படையில், இதுவரை 13 நாடுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர் நெருக்கடிக்கு மத்தியிலும், இஸ்ரேல் நாடு 88 வீரர்களை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பியுள்ளது.

இவர்களுடன் மொத்தம் 200 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக்கில் களம்காண உள்ளனர். இஸ்ரேலிய வீரர்களுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இதுவரை 39,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள போர் சூழலில், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ளனர். ஆனால், உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவும் அதன் கூட்டணி நாடான பெலாரசும் இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் தடை செய்யப்பட்டுள்ளது.

1920ல் பெல்ஜியத்தில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முதலில் சில நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. குறித்த நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா மற்றும் துருக்கி ஆகியவை இடம்பெற்றன.

முதலாம் உலகப் போரில் அவர்களின் பங்கு மற்றும் ஈடுபாடு காரணமாக தடை செய்யப்பட்டது. 1924ல் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கிலும் ஜேர்மனி தடை செய்யப்பட்டது. 1948 லண்டன் ஒலிம்பிக்கிலும் ஜேர்மனி மற்றும் ஜப்பான் தடை செய்யப்பட்டது.

1964 முதல் 1992 வரையில் நிறவெறி ஆட்சி மற்றும் இனப் பிரிவினை காரணமாக தென்னாப்பிரிக்கா தடை செய்யப்பட்டது. 1972ல் ஜிம்பாப்பே நாடும், 2000ல் ஆப்கானிஸ்தான் நாடும், 2015ல் குவைத் நாடும் தடை செய்யப்பட்டது.

ஆனால் 2016ல் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிம்பிக் கொடியின் கீழ் சுதந்திர ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களாக குவைத் பங்கேற்றது.

2024ல் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 15 ரஷ்ய வீரர்களும் 18 பெலாரஸ் வீரர்களும் ஒலிம்பிக் கொடியின் கீழ் சுதந்திர ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களாக பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்