Paristamil Navigation Paristamil advert login

ஜெர்மனியின் உயர்ந்த சிகரத்தில் ஏறிய இளைஞருக்கு நேர்ந்த கதி

ஜெர்மனியின் உயர்ந்த சிகரத்தில் ஏறிய இளைஞருக்கு நேர்ந்த கதி

27 ஆடி 2024 சனி 09:34 | பார்வைகள் : 2329


ஜெர்மனியின் உயர்ந்த சிகரத்தில் ஏறிய இளைஞர் ஒருவர், மின்னல் தாக்கி பரிதாபமாக பலியானார்.

ஜெர்மன் நாட்டவர்களான மூன்று இளைஞர்கள், ஜேர்மனியின் உயர்ந்த சிகரமான Zugspitzeக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை மலை ரயிலில் பயணித்த அவர்கள், அதன் பின் நடந்தே மலைச்சிகரத்தை அடைந்துள்ளனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் கீழே இறங்கும்போது பயங்கரமாக, மீண்டும் மீண்டும் அவர்களை மின்னல் தாக்கியுள்ளது.

அதில், அவர்களில் ஒருவரான 18 வயது இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
புயல் வேறு வீசிக்கொண்டிருந்ததால், அவரது உடலை கீழே கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Zugspitze சிகரம், ஜேர்மன் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையில், ஆஸ்திரியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில், கடல் மட்டத்துக்கு மேல் 9,718 அடி உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்