Paristamil Navigation Paristamil advert login

● ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்வு... யார் அந்த முகமூடி மனிதர்?

● ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்வு... யார் அந்த முகமூடி மனிதர்?

27 ஆடி 2024 சனி 09:35 | பார்வைகள் : 4453


நேற்றைய ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாளில் உலகம் முழுவதும் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, யார் அந்த முகமூடி மனிதர் என்பது தான்...!

'வெள்ளை மற்றும் கறுப்பு' நிறங்களில் ஆடை அணிந்து, தலையை மூடியபடி ஒரு துணியும், முகத்தை மறைத்தும் ஒரு மர்மமான நபர் நிகழ்ச்சி முழுவதும் கலக்கினார்.  அவர் யார்  குறித்து உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் பலவித கேள்விகளை எழுப்பியதோடு, யாராக இருக்கலாம் என பல சந்தேகங்களும்  வெளியிட்டன.

நிகழ்வுகள் ஆரம்பமானபோது Austerlitz நிலையத்தில் இருந்து கைகளில் ஒலிம்பிக் தீபங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அவர், பல்வேறு கட்டிடங்களுக்குள் நுழைந்தும், தாவியும், ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் இடங்களுக்குள் நுழைந்தும் இறுதியாக Trocadéro இனை வந்தடைந்தார்.  அங்கு வைத்து Zinédine Zidane இடம் தனது கைகளில் இருந்த ஒலிம்பிக் தீபத்தினை கையளித்தார். அந்த மேடையில் அவர் தோன்றியவிதமே அவ்வளவு பரபரப்பாக இருந்தது. மேடையில் அடியில் இருந்து சட்டென மேலெழுந்து வந்தார். 

பரிசில் முக்கிய அடையாளங்களாக உள்ள கட்டிடங்கள், லூவர் அருங்காட்சியகம், ஈஃபிள் கோபுரம் போன்றவற்றில் எல்லாம் ஏறி பயணித்திருந்தார். அதன்போது பிரெஞ்சு வரலாறு மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தினை சுருக்கமாகவும் சுவாரஷ்யமாகவும் காட்சிப்படுத்தினர். 

சமூகவலைத்தளங்களில் உடனடியாக இந்த மர்ம நபர் மனங்களை கொள்ளை கொண்ட 'ஹீரோ' ஆனார். சில நிமிடங்கள் அவரைக் காணவில்லை என்றதும் அது தொடர்பில் பல பதிவுகளை எழுதினர். அவர் அமெரிக்க திரைப்பட நடிகர் டாம் க்ரூசாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்தது. 

அதேவேளை அது ஒரு பெண்ணாகக் கூட இருக்கலாம் என இணையவாசிகள் சந்தேகம் வெளியிட்டனர். 

ஆனால் இறுதி வரை அந்த திரை விலக்கப்படவில்லை. அவர் யார் எனவும், அவரது முகமும் காண்பிக்கப்படவில்லை. ஆனால் முகம் அறியாத அந்த 'ஹீரோ'வை மட்டும் அனைவருக்கும் பிடித்துப்போனது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்