TGV : பலநூறு ஊழியர்கள் இரவு பகலாக திருத்தப்பணிகளில்..!

27 ஆடி 2024 சனி 17:56 | பார்வைகள் : 14499
TGV அதிவேக தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதை அடுத்து, திருத்தப்பணிகள் இரவிரவாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், TGV சேவைகள் தடைப்பட்டுள்ளமை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட வல்லுனர்கள் இரவு முழுவதும் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்ததாக SNCF சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும்பாலான தொடருந்துகள் இன்று இயக்கப்பட்டிருந்தன. வடக்கு அட்லாண்டிக் உள்ளிட்ட ஒருசில சேவைகள் தடையை சந்தித்த போதும், ஏனைய சேவைகள் இயக்கப்பட்டன.
தற்போதும் திருத்தப்பணிகள் இரண்டாவது நாளாக திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கள் முழுமையாக சீரடையும் என SNCF நம்பிக்கை வெளியிட்டுள்ளது.