Oasis : மகிழுந்துக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்பு
1 புரட்டாசி 2023 வெள்ளி 14:12 | பார்வைகள் : 20960
மகிழுந்து ஒன்றில் இருந்து எரியூட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரது சடலம்காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை நண்பகல் இச்சடலம் Compiègne காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மகிழுந்தும் எரியூட்டப்பட்டநிலையில் இருந்ததால், மகிழுந்து மற்றும் உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள்பெற முடியவில்லை எனவும், இன்று வெள்ளிக்கிழமை உடற்கூறு பரிசோதனைகள்இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்துக்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்த விசாரணைகள்இடம்பெற்று வருவதாக அந்நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan