இஸ்ரேலிய பிரதமருடன் ஜனாதிபதி மக்ரோன் அவசர உரையாடல்..!

28 ஆடி 2024 ஞாயிறு 19:33 | பார்வைகள் : 7616
இஸ்ரேலிய பிரதமரை தொலைபேசி வழியாக அழைத்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், யுத்தங்களின் புதிய பக்கங்களை ஆரம்பிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
இன்று ஜூலை 28, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த தொலைபேசி வழியான உரையாடல் இடம்பெற்றதாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. லெபனானின் எல்லைப்பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய துருப்புக்கள் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பல சுட்டிக்காட்டியுள்ளன. 10 தொடக்கம் 14 வயதுடைய பத்து சிறுவர்கள் அதில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu இனை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
'யுத்தங்களின் புதிய பக்கங்களை திறக்க வேண்டாம் எனவும், யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு அனைத்து வழிகளையும் பின்பற்ற வேண்டும்!' எனவும் அவரிடம் மக்ரோன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.