Paristamil Navigation Paristamil advert login

முட்டை 65

முட்டை 65

29 ஆடி 2024 திங்கள் 14:27 | பார்வைகள் : 628


முட்டை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சாப்பிடும் போது சிம்பிளனான ரெசிபி செய்திருந்தால் சாப்பாட்டினை விருப்பமுடன் சாப்பிடுவதற்காக முட்டையை வேகவைத்தோ பொரித்தோ சாப்பிடுவோம். சிக்கனில் 65 செய்து சாப்பிட்டிருப்பீங்க. இப்போ முட்டையில் 65 பிரை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாமா. இத கண்டிப்பா வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.

தேவையான பொருள்கள்:

முட்டை - 2

சோளமாவு - 2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

புட் கலர் - 1/4 தேக்கரண்டி

தயிர் - 1 மேஜைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு முட்டைகளின் ஓட்டை எடுத்து விட்டு நான்காக வெட்டி வைக்க வேண்டும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து கலவை முட்டையின் அனைத்து இடங்களிலும் படும் படி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  முட்டை துண்டுகளை போட வேண்டும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போட வேண்டும். இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்க வேண்டும். எண்ணெய் முழுவதும்  உறிஞ்சப்பட்டவுடன் மல்லித்தழை தூவி பாத்திரத்திற்கு மாற்றி வைத்தால் சுவையான முட்டை 65 ப்ரை ரெடி.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்