Paristamil Navigation Paristamil advert login

■ இன்று தரிப்பிடங்கள் இலவசம் + வேகக்கட்டுப்பாடு..!!

■ இன்று தரிப்பிடங்கள் இலவசம் + வேகக்கட்டுப்பாடு..!!

30 ஆடி 2024 செவ்வாய் 06:37 | பார்வைகள் : 1960


இன்று ஜூலை 30, செவ்வாய்க்கிழமை தலைநகர் பரிசில் குடியிருப்பு பகுதி தரிப்பிடங்கள் (stationnement résidentiel) அனைத்தும் இலவசமாக்கப்பட்டுள்ளதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக வளிமண்டலத்தில் மாசடைவு ஏற்பட்டுள்ளதாகவும், வாகன போக்குவரத்துக்களினால் இந்த மாசடைவு மேலும் அதிகமகும் என தெரிவிக்கப்பட்டு இந்த இலவச தரிப்பிட முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச தரிப்பிடங்கள் என்பதால் அதிகளவானவர்கள் மகிழுந்துகள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பொது போக்குவரத்தில் பயணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, குடியிருப்பு பகுதிகளில் சொந்த வாகனங்களை நிறுத்துவதற்குரிய அனுமதி அட்டை (carte de stationnnement résidentiel) வைத்திருப்பவர்களது பகுதிகளில் ஏனைய வாகனங்கள் நிறுத்த முடியாது எனவும், அவை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இந்த 'இலவச தரிப்பிட' முறையை பயன்படுத்த முடியும் எனவும் நகரசபை தெளிவுபடுத்தியுள்ளது.

அத்தோடு, 130 கி.மீ அதிகபட்ச வேகம் கொண்ட சாலைகளுக்கு 110 கி.மீ வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 90 கி.மீ வேகம் மணிக்கு 70 கி.மீ வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு பரிஸ் நகரசபை அறிவுறுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்