உலக கிறிஸ்தவர்களை ஏளனம் செய்தா? ஒலிம்பிக் ஆரம்பவிழா கலைநிகழ்ச்சி.

30 ஆடி 2024 செவ்வாய் 07:29 | பார்வைகள் : 8725
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆரம்பவிழா மிகவும் பிரபலமான முறையில் நடைபெற்று பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருக்கும் அதோவேளையில், "உலக கிறிஸ்தவர்களை ஏளனம் செய்தது ஒலிம்பிக் விழாவின் கலைநிகழ்ச்சி" எனும் பெரும் விமர்சனம் எழுந்துள்ளது.
இயேசு கிறிஸ்துவின் இறுதி இராப்போசனத்தைச் பிரதி பண்ணி பெரும் ஓவியர் Leonardo Da Vinci அவர்கள் வரைந்து, உலகப் புகழ் பெற்ற 'Last Supper' ஓவியத்தை பிரதிபலிக்கின்ற விதமாக ஆற்றுகைக் காட்சிகள் சில காட்டப்பட்டுள்ளன என்றே விமர்சனம் எழுந்துள்ளது. சில கிறித்தவ அமைப்புக்களை, நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், ஆயர்களும், கிறித்தவர்களும் "கிறிஸ்தவத்தை ஏளனம் செய்கின்றவிதமான காட்சிகள்" இவை என்று கூறிக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினங்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற பிரிவினரை உள்ளடக்கிய எல்ஜிபிரிகியூ 'LGBTQ+' சமூகத்தினரை முதன்மைப்படுத்தியதாக அமைந்த குறித்த நடனத்தை தயாரித்த ஒலிம்பிக் தொடக்க விழாவின் கலை இயக்குநருமாகிய தோமா ஜொலி "எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கோடு இந்த விழாவில் இந்த காட்சிகளும் அமைக்கப்படவில்லை" என மறுப்பை வெளியிட்டிருக்கிறார். அரங்க ஆற்றுகை நிகழ்வில் பங்குபற்றிய வேறு சில கலைஞர்களும் தனித்தனியே தங்களது மறுப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1