அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ யார் ?
30 ஆடி 2024 செவ்வாய் 14:13 | பார்வைகள் : 9116
அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்கப் போவதாகவும், சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும் சல்மான்கான் - அட்லி இணையும் படத்தில் கமல்ஹாசன் இணைய போவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவல்படி அட்லி அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஆனால் அட்லியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே அவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது தெரியவரும்.


























Bons Plans
Annuaire
Scan