Paristamil Navigation Paristamil advert login

■ இல் து பிரான்சுக்குள் மழை..!

■ இல் து பிரான்சுக்குள் மழை..!

30 ஆடி 2024 செவ்வாய் 15:06 | பார்வைகள் : 7159


இல் து பிரான்சுக்குள் இன்று மாலை 6 மணிக்கு பின்னர் மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணியில் இருந்து தலைநகர் பரிஸ் உள்ளடங்கலாக இல் து பிரான்ஸ் மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்த அனைத்து மாவட்டங்ககுக்கும் 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் Météo France அறிவித்துள்ளது.

40 மி.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் இடி மின்னல் தாக்குதல்களும், ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, நாளை, ஜூலை 31 ஆம் திகதி புதன்கிழமை நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்