Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் படுகொலை

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் படுகொலை

31 ஆடி 2024 புதன் 08:05 | பார்வைகள் : 7098


ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்  அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹமாஸின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஹனியா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் இவ்வாறு தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய இராணுவம்  தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி மசூத் பிசாக்கியானின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்குபற்றியதன் பின்னர், இருப்பிடம் திரும்பிய நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.

ஹானியா எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்