■ விபத்துக்குள்ளான TGV..!
31 ஆடி 2024 புதன் 10:07 | பார்வைகள் : 3416
பரிசில் இருந்து மார்செய் (Marseille) நோக்கிச் செல்லும் அதிவேக தொடருந்து (TGV) சேவைகள் தடைப்பட்டுள்ளன.
தொடருந்து மீது மரம் முறிந்து விழுந்ததை அடுத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக SNCF வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Saint-Florentin (Yonne) நகரில் பயணித்துக்கொண்டிருந்த தொடருந்து மீது மரம் முறிந்து, தொடருந்தின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை பல்வேறு மாவட்டங்களுல்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதில் விபத்து ஏற்பட்ட Yonne மாவட்டமும் ஒன்றாகும்.