லெபனானில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேற வலியுறுத்தல்
31 ஆடி 2024 புதன் 10:46 | பார்வைகள் : 2411
இஸ்ரேல் நாட்டுடனான பதற்றம் எந்நேரமும் மோசமாக கூடும் என்று லெபனான் நாட்டிலிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல் அவ்வப்போது நடந்துவருவதாகவும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம் என்றும் கூறியுள்ளார் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான David Lammy.
அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்குமாறு வெளியுறவு அலுவலக தூதரக் குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள David Lammy, ஆனால், இந்த பதற்றம் முற்றுமானால், லெபனானிலிருக்கும் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பில் பிரித்தானிய அரசு உறுதியளிக்கமுடியாது.
மக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.
ஆகவே, லெபனானிலிருக்கும் பிரித்தானியர்களுக்கு என்னுடைய செய்தி ஒன்றுதான், உடனடியாக வெளியேறுங்கள் என்பதுதான் அது, என்றும் கூறியுள்ளார் David Lammy.