l'assurance chômage : ஒக்டோபர் இறுதி வரை மாற்றம் இல்லை!
31 ஆடி 2024 புதன் 11:28 | பார்வைகள் : 5477
வேலை தேடுவோருக்கான கொடுப்பனவுகளில் (l'assurance chômage) சில மாற்றங்களை ஏற்படுத்தி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நடைமுறைக்கால காலக்கெடு பிற்போடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை 1 ஆம் திகதி முதல் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையிப், தற்போது ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அது பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜூலை 31, புதன்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் ( journal officiel ) இது குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடுப்பனவுகள் பெறுபவர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாடுகளில் வசித்தால் அவர்களுக்கு இந்த தொகை நிறுத்தப்படும் எனவும், கொடுப்பனவு பெறும் காலம் 18 மாதங்களில் இருந்து 15 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது எனவும், 20 மாதங்களில் எட்டு மாதங்கள் குறைந்தது வேலை பார்த்திருக்கவேண்டும் எனவும் புதிய சட்டங்கள் தெரிவிக்கின்றன. இதனை எதிர்த்து பல தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.