Paristamil Navigation Paristamil advert login

■ சீரற்ற காலநிலை! - இல் து பிரான்சின் மாவட்டங்கள் உட்பட 63 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

■ சீரற்ற காலநிலை! - இல் து பிரான்சின் மாவட்டங்கள் உட்பட 63 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

31 ஆடி 2024 புதன் 14:52 | பார்வைகள் : 5964


இல் து பிரான்ஸ் மாகாணம் உள்ளிட்ட பெரும்பான்மையான மாவட்டங்களில் இன்று மாலையின் பின்னர் மழை மற்றும் வேகமான காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வானிலை அவதானிப்பு மையமான Météo-France இது தொடர்பில் தெரிவிக்கையில், நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது போல், இன்று புதன்கிழமையும் பகல் முழுவதும் கடுமையான வெப்பமும், இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல் து பிரான்சின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் காற்று வேகமாக வீசுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 20 தொடக்கம் 40 மி.மீ மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

மேற்படி அனர்த்தங்கள் காரணமாக இல் து பிரான்சின் எட்டு மாவட்டங்கள் உள்ளடங்கலாக 63 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்