இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணம்!
2 புரட்டாசி 2023 சனி 04:58 | பார்வைகள் : 10199
இன்று நள்ளிரவு முதல் பேருந்து பயண கட்டணத்தை 4.01 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் ஆரம்ப பேருந்து பயண கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையை அடுத்து பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
எனினும் ஆரம்ப பேருந்து பயண கட்டணமாக 30 ரூபா தொடர்ந்தும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பான முழுமையான விபரங்கள் கீழ்வருமாறு.


























Bons Plans
Annuaire
Scan