Paristamil Navigation Paristamil advert login

மணிரத்னம், கமல், சிம்பு கூட்டணியின் ‘தக் லைஃப்’ அதிரடி?

மணிரத்னம், கமல், சிம்பு கூட்டணியின் ‘தக் லைஃப்’ அதிரடி?

1 ஆவணி 2024 வியாழன் 09:53 | பார்வைகள் : 845


நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்த இந்த கூட்டணியினால் தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் நடிகர் சிம்பு இந்த படத்தில் இணைந்திருப்பதும் படத்தின் எதிர்பார்ப்பிற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. 

மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், திரிஷா போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட புதுச்சேரி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

அதாவது கிட்டத்தட்ட 80 சதவீதம் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கமல் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் பாதி படத்திற்கு தங்களின் டப்பிங் பணிகளையும் முடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது சிவாஜி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தை போல் தக் லைஃப் படத்தில் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் இணைந்து படம் முழுவதும் தோன்றுவார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதுவரை இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை இந்தியா முழுவதும் பல இடங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் படமானது 2024 கிறிஸ்துமஸ் அல்லது 2025 பொங்கல் பண்டிகையை குறி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்