Paristamil Navigation Paristamil advert login

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் திட்டம் பலிக்குமா?

விஜய் மகன்  ஜேசன் சஞ்சய் திட்டம் பலிக்குமா?

1 ஆவணி 2024 வியாழன் 10:13 | பார்வைகள் : 1767


தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகன், நாயகி, வில்லன், இசையமைப்பாளர் ஆகிய நால்வரையும் ஜேசன் சஞ்சய் தேர்வு செய்துள்ளதாகவும் இவர்கள் 4 பேருமே பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் என்றும் கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் திட்டமிட்டபடி இது மட்டும் நடந்து விட்டால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ் விக்ரம், நாயகியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், வில்லனாக விஜய் சேதுபதி மகன் சூர்யா, இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் மகன் அமீன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. ஜேசன் சஞ்சயின் இந்த மாஸ் திட்டம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்