Paristamil Navigation Paristamil advert login

Emmanuel Macron 475,000 யூரோக்கள் செலவுசெய்து இரவு உணவு, தொலைதூரப் பயணங்கள்.

Emmanuel Macron 475,000 யூரோக்கள் செலவுசெய்து இரவு உணவு, தொலைதூரப் பயணங்கள்.

1 ஆவணி 2024 வியாழன் 16:08 | பார்வைகள் : 3241


பிரான்ஸ் அரசதலைவர் Emmanuel Macron அவர்கள் COVID 19 காலத்திற்கு பின்னர் வந்த ஆண்டுகளில் இவ்வாண்டின் ஆறு மாதங்களில் சுமார் 475,000 யூரோக்களை இரவு உணவுடனான சந்திப்புக்களுக்கும், தன் அரசமுறை தொலைதூர பயணங்களுக்கு செலவு செய்துள்ளார் எனவும், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இது அதிகூடிய செலவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 இல் 9.87 மில்லியன் யூரோக்களாக இருந்த பயணங்கள் மற்றும் வரவேற்புகளுக்கான செலவு, 2022 இல் 13.3 மில்லியன் யூரோக்களாக அதிகரித்து, கடந்த ஆண்டு 2023 21 மில்லியன் யூரோக்களை எட்டியது, இந்த நிலையில் இவ்வாண்டின் 6 மாதங்களில் மட்டும் 475,000 யூரோக்களைக் கடந்துள்ளது.

அரசதலைவர் சீனா, ஓசியானியா, ஆபிரிக்கா, ஜப்பான் (G7 உச்சிமாநாடு) மங்கோலியா,இந்தியா (G20) சிறிலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு பல முக்கிய பயணங்களை மேற்கொண்டார் இவை அதிகூடிய தூரதேசப் பயணங்கள். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் விருந்துகள் என கூடுதலான செலவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் வரவேற்பு செலவுகளில், எலிஸீயில் உள்ள பெரிய சமையலறைகளின் சீரமைப்பு  "அடிக்கடி கேட்டரிங் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு" வழிவகுத்தது அதற்கு மொத்தம் 1.3 மில்லியன் யூரோக்கள் செலவானது என அறியப்படுகிறது.

உதாரணமாக பிரித்தானிய மன்னர் சார்லஸ் III  அவர்களுக்கு வெர்சாய்ஸ் மாளிகையில் இரவு விருந்து வழங்கியதில் 475,000 யூரோக்களும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு லூவ்ர் மாளிகையில் இரவு விருந்து வழங்கியதில் 412,000 யூரோக்களும் செலவு செய்யப்பட்டுள்ளதாக எலிஸீ மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்