கண் கலங்க வைக்கும் வயநாடு நிலச்சரிவு: செயற்கைகோள் படங்கள் இஸ்ரோ வெளியீடு
2 ஆவணி 2024 வெள்ளி 02:44 | பார்வைகள் : 1241
கேரளா, வயநாடு நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழையால், வயநாடு மாவட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி, 291 பேர் உயிரிழந்தனர். ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறங்கி மண்ணில் புதைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் இரண்டு தனியார் சொகுசு விடுதிகளில் இருந்த சுற்றுலா பயணியரை, ராணுவத்தினர் போராடி மீட்டனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்த படங்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த படங்கள் எந்த இடங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியவும், மீட்பு பணிகளுக்கு உதவியாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.