Paristamil Navigation Paristamil advert login

JO24' ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற judokate Barbara இன் தந்தைக்கு சிறை.

JO24' ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற judokate Barbara இன் தந்தைக்கு சிறை.

2 ஆவணி 2024 வெள்ளி 07:26 | பார்வைகள் : 2335


பாரிசில் நடந்துவரும் 'JO24' ஒலிம்பிக் போட்டியில் 70 Kg  உட்பட  ஜூடோ  வீராங்கனை 
Judokate Barbara Matic முதல் சுற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார், அடுத்த சுற்றிலும் அவரே தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த வீராங்கனையின் தந்தை பாலியல் வன்கொடுமை புரிந்தார் என்னும் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

மகளின் வெற்றியை கொண்டாடிய தந்தை ஒலிம்பிக் போட்டிகளில் தன்னார்வ சேவையில் பணிபுரியும் யுவதி ஒருவரை அவரின் அனுமதி இன்றி முத்தமிட்டதுடன், அவரை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முயற்சித்துள்ளார், இதனையடுத்து குறித்த யுவதி கால்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். அவரின் முறைப்பாட்டின் பெயரில் விசாரணை நடத்திய பாரிஸ் 7ம் வட்டார காவல்துறையினர் Croatia நாட்டின் ஜூடோ வீராங்கனை Judokate Barbara Matic இன் தந்தையை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது என 'Le Parisien' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை ஜூடோ வீராங்கனை Judokate Barbara Matic ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்தும் பங்குபற்ற, குறித்த  வழக்கு தடையாக இருக்காது என ஒலிம்பிக் விளையாட்டு  குழு தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்