மீண்டும் தேர்தலை நடத்த கோரி 'Conseil constitutionnel' இல் மனுத்தாக்கல் செய்துள்ளது RN.
2 ஆவணி 2024 வெள்ளி 08:04 | பார்வைகள் : 3071
ஏற்கனவே France Insoumise கட்சியினர் 'Conseil constitutionnel' எனப்படும் மேல்சபையில், "நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது எனவே மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என தாக்கல் செய்த மனுவை "அரசியல் யாப்பின் படி குறித்த மனுவை ஏற்க்க முடியாது" என நிராகரித்த மேல்சபையிடம் இதே மனுவை தற்போது Rassemblement national (RN) கட்சியின் (அரசதலைவர் வேட்பாளர்) Mme Marine Le Pen மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் கடந்த ஜுலை 18ம் திகதி அன்று நாடாளுமன்றத்துக்கான தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. மூன்று சுற்றுகளாக நடந்த தேர்தலின் மூன்றாவது சுற்றில் camp présidentiel கட்சியின் சார்பில் அதன் துணைத்தலைவர் Yaël Braun-Pivet அவர்களும்,Communiste கட்சியின் சார்பில் André Chassaigne அவர்களும்,Rassemblement national கட்சியின் சார்பில் Sébastien Chenu அவர்களும் போட்டியிட்டனர், இதில் Camp présidentiel கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் துணைத்தலைவர் Yaël Braun-Pivet அவர்கள் 220 வாக்குக்கள் பெற்று நாடாளுமன்ற தலைவராக தெரிவானார்.
நடந்து முடிந்த அந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் 17 துணை அமைச்சர்கள் வாக்களித்துள்ளனர், ஆனால் அரசியல் யாப்பின் பிரகாரம் நாடாளுமன்ற தலைவரை தெரிவு செய்யும் வாக்களிப்பில் துணை அமைச்சர்கள் வாக்களிக்க முடியாது, அப்படி இருக்க அவர்களின் வாக்குகளை சேர்த்துக் கொண்டது ஒரு அதிகாரப் பிரிவினையின் மீறல் எனவே மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என France Insoumise கட்சியினரை அடுத்து தற்போது
Rassemblement national (RN) கட்சியினர் மனு தாக்கல் செய்துள்ளனர். Conseil constitutionnel' எனப்படும் மேல்சபை இவர்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.