Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில்  நடைமுறைப்படுத்தப்படும்  முக்கிய மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில்  நடைமுறைப்படுத்தப்படும்  முக்கிய மாற்றங்கள்

2 ஆவணி 2024 வெள்ளி 15:57 | பார்வைகள் : 2250


சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்களை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை சில குறிப்பிட்ட துறைகளில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பணியாளர்களுக்கு குறைவான வேலையே இருந்ததால், அவர்களுக்கு 12 மாதங்களுக்கு வேலையின்மை உதவி நிதி வழங்கப்பட்டது.

ஒகஸ்ட்  1ஆம் திகதி முதல், அவர்கள் அதிகபட்சமாக, 18 மாதங்களுக்கு இந்த நிதி உதவியைக் கோரலாம்.

ஒகஸ்ட்  1ஆம் திகதி முதல், வங்கிகள் படிப்படியாக வட்டி விகிதத்தை குறைக்க இருக்கின்றன.

ஒகஸ்ட் மாதம் முழுவதும், பழுது பார்த்தல் முதலான காரணங்களால் பல்வேறு பாதைகளில் ரயில் சேவை பாதிப்புக்குள்ளாக உள்ளது.

சுவிட்சர்லாந்தில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நேரம் வந்துவிட்டது. பள்ளிகள் அமைந்துள்ள மாகாணங்களுக்கு ஏற்ப, ஆகத்து 9ஆம் திகதி முதல் ஆகத்து 25ஆம் திகதிக்குள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

விடுமுறை முடிந்து நாடு திரும்புவோர், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்