Paristamil Navigation Paristamil advert login

மிருதன் 2 - விரைவில் ...

மிருதன் 2 - விரைவில் ...

3 ஆவணி 2024 சனி 08:08 | பார்வைகள் : 905


ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மிருதன். இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். 

படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து லட்சுமிமேனன், அனிகா சுரேந்திரன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமானது ஜாம்பிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படம் ஓரளவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது. டி இமான் இசையில் வெளியாகி இருந்த படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. 

படத்தின் இறுதியில் ஜெயம் ரவி ஜாம்பியாக மாறுவது போன்று அமைக்கப்பட்டிருந்தது. எனவே இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயம் ரவி, சக்தி சௌந்தர்ராஜன் இரண்டாவது முறையாக டிக் டிக் டிக் திரைப்படத்தில் இணைந்திருந்த நிலையில் மூன்றாவது முறையாக மிருதன் 2 திரைப்படத்தில் இணைய உள்ளனர்.

இதன் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும், படத்தினை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த பேட்டியிலும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் 2025 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளன. எனவே விரைவில் மிருதன் 2 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்