அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடவேண்டும் - குடும்பத்தினர் ஆதரவு
1 ஆடி 2024 திங்கள் 09:21 | பார்வைகள் : 1953
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடவேண்டும் அவர் போட்டியிலிருந்து விலகக்கூடாது என அவரது குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான நேரடிவிவாதத்தின் போது ஜோபைடன் தடுமாறியதை தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் கருத்துக்கள் காணப்படும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை காம்ப் டேவிட்டில் தனது குடும்பத்தவர்களை சந்தித்துள்ளார்.
குடும்பத்தவர்களுடனான சந்திப்பின்போது அவரது அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கார்டியன் தெரிவித்துள்ளது.
காம்ப்டேவிட் சந்திப்பின்போது ஜோபைடனின் மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கலந்துகொண்டுள்ளனர்.
தன்னால் மேலும் நான்கு வருடங்களிற்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியும் என்பதை பைடனால் அமெரிக்க மக்களிற்கு நிரூபிக்க முடியும் என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர் என நியுயோர்க் டைம்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
முதல்விவாதத்தில் அவர் மிகவும் பலவீனமான விதத்தில் நடந்துகொண்டதை அறிந்துள்ள அவரது குடும்பத்தினர் அதேவேளை டொனால்ட் டிரம்ப்பை தோற்கடிக்க கூடிய ஒரேயொருவர் பைடனே என கருதுகின்றனர்.
போட்டியிலிருந்து விலகவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களை புறக்கணிக்கவேண்டும் என ஜோபைடனின் மனைவியும் மகன் ஹன்டருமே அதிகளவிற்கு வற்புறுத்தினார்கள் என ஏபி தெரிவித்துள்ளது.