Paristamil Navigation Paristamil advert login

■ புதிய மாதம்.. புதிய மாற்றங்கள்...!!

■ புதிய மாதம்.. புதிய மாற்றங்கள்...!!

1 ஆடி 2024 திங்கள் 10:50 | பார்வைகள் : 7147


இன்று ஜூலை 1 ஆம் திகதி. இந்த புதிய மாதத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது.

எரிவாயு கட்டணம் அதிகரிப்பு!

இன்று முதல் எரிவாயு கட்டணம் 11.7% சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் காரணமாக பிரான்சிலும் எரிவாயு கட்டணம் அதிகரிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு!

இன்று ஜூலை 1 ஆம் திகதி முதல் 21 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. plan d'épargne avenir climat என பெயரிடப்பட்டுள்ள இந்த கணக்கில் Livret A கணக்கினைப் போல் 22,950 யூரோக்கள் வரை சேமிக்க முடியும். ஆனால் இதில் Livret A கணக்கினைப் போல் வட்டி வீதத்தை அரசு தீர்மானிக்காது எனவும், மாறாக சந்தை நிலவரமே தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயரின் கணக்கினை ஆரம்பிக்க முடியும் எனவும், கணக்கினை பிள்ளைகளில் 21 ஆவது வயது வரை மீளப்பெறமுடியாதபடி தடுத்து வைக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பல்பொருள் அங்காடிகளில் புதிய நிபந்தனை!

பல்பொருள் அங்காட்சிகளில் விற்பனைக்கு உள்ள உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் போதோ, அல்லது குறைக்கப்படும் போதோ, உள்ளே உள்ள உணவின் நிறையில் ஏற்படும் மாற்றம் தொடர்பாகவும் காட்சிப்படுத்த வேண்டும் என புதிய நிபந்தனை கொண்டுவரப்பட்டுள்ளது.

எளிதில் பார்க்கக்கூடியவாறு உணவின் நிறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காட்சிப்படுத்த வேண்டும் எனும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைதேடுவோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

வேலை தேடுவோருக்கான காப்புறுதி கொடுப்பனவு (allocations d'assurance chômage) இன்று முதல் சிறிய அளவில் அதிகரிப்புக்கு உள்ளாகிறது. இன்று முதல் இந்த கொடுப்பனவுகள் 1.2% சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது.

2 மில்லியன் பேர் இந்த கொடுப்பனவு அதிகரிப்பினால் நன்மையடைய உள்ளனர்.

இந்த கொடுப்பனவு, வேலை தேடுவோருக்கான மாதாந்த கொடுப்பனவாக €991.07 யூரோக்கள் அல்லது அதற்கு மேல் பெறுபவர்களுக்கு அதிகரிக்கப்பட மாட்டாது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்