சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் ராகுல் பேச்சு
1 ஆடி 2024 திங்கள் 11:19 | பார்வைகள் : 1417
சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் பேசினார். இதற்கு, சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பது தான் அவை விதி என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.
ஹிந்து கடவுள் சிவன், குருநானக் படங்களை காண்பித்து, லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: 20க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளன. லோக்சபாவில் சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா?. சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல. அகிம்சைக்கானது.
அரசியலமைப்பு சட்டம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாக்குதலில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தை காத்து வருகிறோம். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
சபாநாயகர் அறிவுரை
சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்டக் கூடாது என்பது தான் அவை விதி என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.
பா.ஜ.,வினர் கோஷம்
லோக்சபாவில் ராகுல் பேசும் போது, பா.ஜ., எம்.பிக்கள் பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்டனர்.