உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கிம் ஜாங் உன்

30 ஆவணி 2023 புதன் 09:36 | பார்வைகள் : 7410
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணுசக்தி போர் குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
கொரிய பிராந்தியத்தில் நீடித்து வரும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அணுசக்தி அச்சுறுத்தல்களை கையாளுவதை நோக்கமாக கொண்டு அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளும் இணைந்து கடற்படை பயிற்சியை நடத்தியது.
மேலும் கடந்த வாரம் முதல் அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவங்கள் தனித்தனியாக கோடை இருதரப்பு ராணுவ பயிற்சிகளை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதனை தற்காப்பு காரணங்களுக்காக மட்டுமே நடத்தி வருவதாக இரண்டு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், எந்தவொரு படையெடுப்பாளர்களையும் எதிர்த்து சண்டையில் தயாராக இருக்குமாறு தன்னுடைய இராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வட கொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்ட தகவல்படி,
கொரிய தீபகற்பத்தில் உள்ள கடற்பரப்பில் அணு ஆயுத போரின் எச்சரிக்கையுடன் அபாயகரமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக ஜனாதிபதி கிம் ஜாங் உன் உரையாற்றினார் என தெரியவந்துள்ளது.
மேலும் இதற்கு அமெரிக்காவின் உந்துதல் பகையே காரணம் என்று அவர் குறிப்பிட்டதாகவும் கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.