Paristamil Navigation Paristamil advert login

துருக்கி நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இஸ்ரேல் விமானம்

துருக்கி நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இஸ்ரேல் விமானம்

1 ஆடி 2024 திங்கள் 12:43 | பார்வைகள் : 1042


ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கி காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. 

அத்துடன் இரு நாடுகளுக்குமான நேரடி விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ அவசரம் கருதி துருக்கியில் தரையிறக்கப்பட்ட இஸ்ரேலிய விமானம் அங்குள்ள ஊழியர்களின் செயலால் ஏமாற்றத்துடன் வெளியேறும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

போலந்தில் இருந்து இஸ்ரேல் பயணப்பட்ட El Al பயணிகள் விமானமே மருத்துவ அவசரத்தால் துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

ஆனால் துருக்கியின் Antalya விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி கிரேக்கத்திற்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Antalya விமான நிலைய ஊழியர்கள் இஸ்ரேல் விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மருத்துவ அவசரம் இருந்தும் Antalya விமான நிலைய ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கிரேக்கத்தின் ரோத்ஸ் தீவுக்கு விமானம் புறப்பட்டு சென்றதாகவும், அங்கிருந்து எரிபொருள் நிரப்பியதை அடுத்து அந்த விமானம் இஸ்ரேல் புறப்பட்டுள்ளது.


இதனிடையே, மருத்துவ அவசரம் காரணமாக இஸ்ரேலிய விமனாம் தரையிறக்க அனுமதிக்கப்பட்டதையும், நோயாளியை சிகிச்சைக்கு அனுப்பியதையும் அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.

மேலும், மனிதாபிமான அடிப்படையில் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது என்றும், ஆனால் அதற்கான நடைமுறைகள் முடிவடையவிருந்த நிலையில், விமானி தனது சொந்த விருப்பப்படி வெளியேற முடிவு செய்தார் என்றும் துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்ட தகவலில், அந்த விமானம் பல மணி நேரம் எரிபொருள் நிரப்பும் பொருட்டு காத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்