நடிகை சுனைனாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா?

1 ஆடி 2024 திங்கள் 15:04 | பார்வைகள் : 8547
நடிகை சுனைனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தமானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான சுனைனா 'காதலில் விழுந்தேன்’, ’மாசிலாமணி’ ’வம்சம்’ ’திருத்தணி’ ’நீர்ப்பறவை’ ’தெறி’ ‘கவலை வேண்டாம்’ ’தொண்டன்’ ’காளி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கையும் இன்னொரு ஆணின் கையும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார் என்பதும் தெரிந்தது. இருப்பினும் சுனைனாவின் வருங்கால கணவர் யார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சுனைனாவுக்கும் துபாயை சேர்ந்த யூடியூபரான காலில் அல் அமெரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுனைனா திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது உண்மையா என்பதை சுனைனா விரைவில் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.