ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை விசேட உரை!

1 ஆடி 2024 திங்கள் 17:23 | பார்வைகள் : 6879
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி நாளை (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி நாளை நடைபெறவிருந்த இதனுடன் தொடர்புடைய பிரேரணை தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (01) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதேவேளை, அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மூன்று உடன்படிக்கைகளில் ஒன்று இன்னும் கைச்சாத்திடப்படவில்லை என்பதே அதற்கு காரணம் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய லக்ஷ்மன் கிரியெல்ல, மூன்று உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடாமல் விவாதம் நடத்துவதில் பயனின்லை என குறிப்பிட்டார்.
இதேவேளை, மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் பூதவுடல் ஜூலை 03ஆம் திகதி இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதன் காரணமாக அன்றைய தினம் பாராளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என பாராளுமன்ற விவகாரக் குழு இணக்கம் தெரிவித்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
பிற்பகல் 2.00 மணி முதல் மறுநாள் மாலை 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டிடத்தின் முகப்பில் அமைந்துள்ள வரவேற்பு மண்டபத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025