மக்ரோனது அமைச்சரவையில் உட்பூசல்.. சமாதானப்படுத்தும் முயற்சியில் மக்ரோன்..!
1 ஆடி 2024 திங்கள் 17:49 | பார்வைகள் : 5659
பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்து சூடு வைத்துக்கொண்டுள்ளதாக இம்மானுவல் மக்ரோன் மீது விமர்சனங்களை வைக்கப்பட்டுள்ளன.
நடைபெற்று முடிந்த முதலாம் கட்ட வாக்கெடுப்பில் தீவிர வலதுசாரிகள் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதோடு, இம்மானுவல் மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சியினை மூன்றாவது இடத்துக்கும் தள்ளியுள்ளனர் மக்கள். இந்த தேர்தலுக்கான அழைப்பை ஜனாதிபதி மக்ரோனே விடுத்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் உட்பட அமைச்சரவையிலும் மாற்றங்கள் கொண்டுவரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பல முரன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அமைச்சரவையில் ஒரு இருண்ட சூழல் நிலவுகிறது என்பதை குறிக்கும் விதமாக ’ambiance morose’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மக்ரோன் ஈடுபட்டுள்ளார். இன்று ஜூலை 1 ஆம் திகதி பிற்பகல் அமைச்சரவையுடன் ஜனாதிபதி மக்ரோன் உரையாடினார். இந்த சந்திப்பு பெரும் ‘பதற்றமான’ சூழ்நிலைக்கு மத்தியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.