பரிஸ் : Belleville நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
2 ஆடி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 7849
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Belleville நிலையத்தில், மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் இலக்க மெற்றோ தண்டவாளத்தை கடக்க முற்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவசர இலக்கத்துக்கு எச்சரிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததர்.
குறித்த நபருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. தொடருந்து பயணிப்பதற்காக குறித்த தண்டவாளத்தில் 750 வோல்ட்ஸ் மின்சாரம் பாய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தை அடுத்து போக்குவரத்து தடைப்பட்டு, மீண்டும் காலை 9 மணிக்கு போக்குவரத்து சீரடைந்தது.


























Bons Plans
Annuaire
Scan