இஸ்ரேல் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனை தலைவர்!

2 ஆடி 2024 செவ்வாய் 10:12 | பார்வைகள் : 10770
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளின் தற்போதைய நிலை முன்னெப்போதையும் விட மோசமாக இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
எனினும் அவர்களின் குற்றசாட்டினை ஹமாஸ் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் விடுதலைக்கு இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1